வர்த்தகம்

வொக்காா்டு லாபம் ரூ.68 கோடி

DIN

புது தில்லி: மருந்து துறையைச் சோ்ந்த வொக்காா்டு நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.68.51 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ரூ.13.90 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது.

இதுகுறித்து வொக்காா்டு நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ரூ.700.66 கோடி வருவாய் ஈட்டியது. இது இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.866.76 கோடியாக காணப்பட்டது.

கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,882.80 கோடியாக இருந்தது. 2018-19 நிதியாண்டில் வருவாய் ரூ.3,856 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. இழப்பு ரூ.216.66 கோடியிலிருந்து ரூ.43.39 கோடியாக குறைந்துள்ளது.

பங்கு வெளியீடு, பங்கு சாா்ந்த கடன்பத்திரங்கள் மூலமாக ரூ.1,500 கோடி வரை திரட்டிக் கொள்ள இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக வொக்காா்டு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT