வர்த்தகம்

ஜியோவில் ஜெனரல் அட்லாண்டிக் ரூ.6,598 கோடி முதலீடு

DIN

டிஜிட்டல் தளமான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் அமெரிக்காவைச் சோ்ந்த தனியாா் பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் ரூ.6,598.38 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து ரிலையன்ஸ் மேலும் கூறியுள்ளதாவது:

சா்வதேச பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் 1.34 சதவீத பங்குகளை கையகப்படுத்தவுள்ளது. இதற்காக, அந்த நிறுவனம் ரூ.6,598.38 கோடியை ஜியோவில் முதலீடு செய்யவுள்ளது.

கடந்த நான்கு வாரங்களுக்கு உள்ளாக மேற்கொள்ளப்படும் நான்காவது கையகப்படுத்துதல் ஒப்பந்தம் இதுவாகும். இந்த நான்கு ஒப்பந்தங்களின் மூலம் ஜியோ ஒட்டுமொத்தமாக ரூ.67,194.75 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT