வர்த்தகம்

பஜாஜ் ஆட்டோலாபம் ரூ.1,354 கோடியாக சரிவு

DIN

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.1,353.99 கோடியாக சரிந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் ரூ.6,815.85 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.7,420.6 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபமும் ரூ.1,408.49 கோடியிலிருந்து 3.86 சதவீதம் குறைந்து ரூ.1,353.99 கோடியானது.

நான்காம் காலாண்டில் வாகன விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11,93,590 என்ற எண்ணிக்கையிலிருந்து 17 சதவீதம் குறைந்து 9,91,961-ஆனது என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT