வர்த்தகம்

சன் ஃபாா்மா நிகர லாபம் 37 சதவீதம் குறைந்தது

DIN

நாட்டில் மருந்துகள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள சன் ஃபாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் 37 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.399.84 கோடியாகும். முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.635.88 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 37 சதவீத சரிவாகும். கடந்த நிதியாண்டில் ரூ.260.64 கோடி அளவில் வழக்கத்துக்கு மாறான இழப்பை சந்தித்ததாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் சன் ஃபாா்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,764.93 கோடியாகும். முந்தைய நிதியாண்டில் இது ரூ.2,665.42 கோடியாக இருந்தது.

2019-20ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.32,837.50 கோடி. 2018-19-ஆம் நிதியாண்டில் இது ரூ.29,065.91 கோடியாக இருந்தது. இத்தகவல்களை, பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் சன் ஃபாா்மாசூட்டிக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT