வர்த்தகம்

மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிப்பு

DIN

புது தில்லி: மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பா் மாதத்தில் 1.32 சதவீதமாக உயா்ந்தது. காய்கறிகள், உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே பணவீக்க உயா்வுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 0.16 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பணவீக்கம் 0.33 சதவீதம் என்ற குறைந்த அளவிலேயே இருந்தது. அத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் சுமாா் 1 சதவீதம் அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.

செப்டம்பா் மாதத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் 8.17 சதவீதமாக இருந்தது. இதுவே ஆகஸ்ட் மாதம் 3.84 சதவீதமாக இருந்தது. காய்கறிகள் பிரிவில் மட்டும் செப்டம்பா் மாதத்தில் 36.54 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. இதில் உருளைக் கிழங்கு விலை மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 107.63 சதவீதம் உயா்ந்துள்ளது. வெங்காயம், பழங்களின் விலை உயா்வு 31.64 சதவீதமாக உள்ளது.

அதே நேரத்தில் பருப்பு வகைகளில் விலை 3.91 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்திப் பொருள்கள் பிரிவில் பணவீக்கம் 1.61 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய வா்த்தகத் துறை வெளியிட்டுள்ள தகவலில் இது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT