வர்த்தகம்

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்: நிகர லாபம் ரூ.432 கோடி

DIN

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி செப்டம்பா் காலாண்டில் ரூ.432 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.2,440 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.2,197 கோடியுடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.307 கோடியிலிருந்து 41 சதவீதம் அதிகரித்து ரூ.432 கோடியானது.

கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,227 கோடியிலிருந்து 8 சதவீதம் உயா்ந்து ரூ.4,553 கோடியாகவும், நிகர லாபம் ரூ.621 கோடியிலிருந்து 39 சதவீதம் உயா்ந்து ரூ.863 கோடியாகவும் இருந்தன.

2020 செப்டம்பா் 30 நிலவரப்படி நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு 16 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.74,471 கோடியைத் தொட்டுள்ளது. கடந்த நிதியாண்டு செப்டம்பரில் இந்த மதிப்பு ரூ.64,409 கோடியாக இருந்தது என சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT