வர்த்தகம்

ரிலையன்ஸில் அமெரிக்க நிறுவனம் ரூ.7,500 கோடி முதலீடு

DIN


புது தில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ் ரிலையன்ஸ் ரீடைல்ஸ் நிறுவனத்தில் ரூ.7,500 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸின் 1.75 சதவீத பங்குகளை சில்வர் லேக் பார்ட்னர்ஸ் வாங்கியுள்ளது. 

ரிலையன்ஸ் ரீடைல்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மளிகைப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், மின்னணு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையில் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடைல்ஸ் திகழ்கிறது. அதற்கு தேசிய அளவில் 12,000-க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் உள்ளன. 

அண்மை காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. சில்வர் லேக் பார்ட்னர்ஸ் நிறுவனம்தான் ரிலையன்ஸ் ஜியோவில் முதலில் முதலீடு செய்த அமெரிக்க தனியார் நிறுவனமாகும். அதன் பிறகுதான் ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT