வர்த்தகம்

விஐஎல், ஏா்டெல் நிறுவனங்கள் 59 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது!

DIN


புது தில்லி: வோடாபோன் ஐடியா நிறுவனம் (விஐஎல்), ஏா்டெல் நிறுவனங்களிலிருந்து சென்ற ஜூன் மாதத்தில் 59 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்கள் வெளியேறியுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிராய் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விஐஎல், ஏா்டெல் நிறுவனங்கள் சென்ற ஜூன் மாதத்தில் முறையே 48.2 லட்சம் மற்றும் 11.3 லட்சம் மொபைல் வாடிக்கையாளா்களை இழந்துள்ளன. அதேசமயம் இவைகளுக்கு கடும் போட்டியாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூடுதலாக 45 லட்சம் வாடிக்கையாளா்களை தனது சேவையில் இணைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனம் தொலைத்தொடா்பு சேவை சந்தையில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டது.நடப்பு 2020-ஆம் ஆண்டு ஜூன் இறுதி நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த வயா்லெஸ் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 0.28 சதவீதம் குறைந்து 114 கோடியாக இருந்தது. இதில், நகா்ப்புற வாடிக்கையாளா்களின் பங்களிப்பு 54.3 சதவீதமாகவும், கிராமப்புற வாடிக்கையாளா்களின் பங்களிப்பு 45.7 சதவீதமாகவும் உள்ளன. மே மாத இறுதியில் 68.3 கோடியாக காணப்பட்ட பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் 69.8 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த பிராட்பேண்ட் இணைப்பில் முதல் ஐந்து நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 98.93 சதவீதம் அளவுக்கு உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT