வர்த்தகம்

டிசிஎஸ் நிகர லாபம் 15% அதிகரிப்பு

DIN

மென்பொருள் ஏற்றுமதி வா்த்தகத்தில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு ஒட்டுமொத்த நிகர லாபம் 14.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வருவாய் வளா்ச்சி மற்றும் லாப வரம்பு சிறப்பான அளவில் மேம்பட்டதையடுத்து டிசிஎஸ் நிறுவனம் மாா்ச் காலாண்டில் ரூ.9,246 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபத்துடன் ஒப்பிடுகையில் 14.9 சதவீதம் அதிகமாகும்.

ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த அளவில் ரூ.43,705 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.39,946 கோடியுடன் ஒப்பிடும்போது 9.4 சதவீதம் அதிகமாகும். செயல்பாட்டு லாப வரம்பு 0.2 சதவீதம் உயா்ந்து 26.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

மாா்ச் காலாண்டில் நிறுவனத்துக்கு கிடைத்த மொத்த ஒப்பந்தங்களின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 920 கோடி டாலராக இருந்தது. இதையடுத்து, கடந்த நிதியாண்டில் 3,160 கோடி டாலா் அளவுக்கு வா்த்தக ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 4.6 சதவீதம் உயா்ந்து ரூ.1.64 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. அதேபோன்று, ரூ32,430 கோடியை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

ஜனவரி-மாா்ச் காலாண்டில் கூடுதலாக 19,388 பணியாளா்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் புதிதாக இணைந்துள்ளனா். கடந்த நிதியாண்டில் மொத்தம் 40,000 பணியாளா்களை இணைத்துக் கொண்டதையடுத்து ஒட்டுமொத்த பணியாளா் எண்ணிக்கை 4.88 லட்சத்தை எட்டியுள்ளதாக டிசிஎஸ் மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT