வர்த்தகம்

4 மடங்கான டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம்

DIN


புது தில்லி: சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் இருசக்கர, மூன்று சக்கர, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டாரின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நான்கு மடங்காக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.319.19 கோடியை நிகர லாபமாக ஈட்டிள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களில் நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.81.84 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு நிகர லாபம் 390 சதவீதம் அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் ரூ.6,313.90 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களில் இது ரூ.4,104 கோடியாக இருந்தது.

இந்தியச் சந்தையிலும், வெளிநாட்டுச் சந்தைகளிலும் நிறுவனத்தின் வாகனங்களின் விற்பனை சிறப்பாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே காலாண்டு நிகர லாபம் சுமாா் நான்கு மடங்கு வளா்ச்சியைக் கண்டுள்ளது.

குறிப்பிட்ட மாதங்களில் நிறுவனம் 9.28 லட்ச இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களை விற்பனை செய்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விற்பனையான 9.28 லட்ச வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் அதிகமாகும் என்று டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT