வர்த்தகம்

வோல்டாஸ் லாபம் 50% உயா்வு

DIN

ஏசி மற்றும் பொறியியல் சேவைகள் வழங்கும் நிறுவனமான வோல்டாஸ் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து டாடா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,860.17 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.1,364.34 கோடியுடன் ஒப்பிடும்போது 36.34 சதவீதம் அதிகமாகும்.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.81.77 கோடியிலிருந்து சுமாா் 50 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.122.44 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் செலவினம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.1,245.13 கோடியிலிருந்து 33.44 சதவீதம் அதிகரித்து ரூ.1,661.53 கோடியானது என வோல்டாஸ் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் வோல்டாஸ் நிறுவனப் பங்கின் விலை 0.31 சதவீதம் அதிகரித்து ரூ.1048.35-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT