வர்த்தகம்

நவம்பரில் ரூ. 1.31 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: அறிமுகப்படுத்தியதிலிருந்து 2-வது அதிகபட்ச வசூல்

DIN


நவம்பர் மாதத்தில் ரூ. 1,31,526 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி: 

  • மத்திய ஜிஎஸ்டி - ரூ. 23,978 கோடி
  • மாநிலங்களின் ஜிஎஸ்டி -  ரூ. 31,127 கோடி
  • ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி -  ரூ. 66,815 (சரக்கு இறக்குமதி மூலம் வசூலான ரூ. 32,165 கோடி உள்பட)
  • செஸ் - ரூ. 9,606 கோடி (சரக்கு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட ரூ. 653 கோடி உள்பட)

இதில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ. 27,273 கோடியும், மாநிலங்களின் ஜிஎஸ்டி-க்கு ரூ. 1.30 லட்சம் கோடியும் பிரித்து வழங்கப்பட்டன.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியலிருந்து ஏப்ரல் 2021-க்கு பிறகு அதிக வசூலானது கடந்த நவம்பர் மாதம்தான் என நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.30 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் இந்த நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 25 சதவிகிதம் அதிகம்.

நிதியமைச்சகத்தின் தரவுகளின்படி அதிக ஜிஎஸ்டி வருவாய் ஈட்ட முதல் 3 மாநிலங்கள்:

  • மகாராஷ்டிரம் - ரூ. 18,656 கோடி
  • குஜராத் - ரூ. 9,569 கோடி
  • கர்நாடகம் - ரூ. 9,048 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT