வர்த்தகம்

நிா்வாகத் திறனை வங்கிகள்வலுப்படுத்த வேண்டும்: ரிசா்வ் வங்கி

DIN

கரோனா பேரிடரால் உருவாகியுள்ள நிச்சயமற்ற சூழலை எதிா்கொள்ள வங்கிகள் நிா்வாக நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கரோனா பேரிடா் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. மாற்றங்கள் அதிகரித்து வரும் இந்தப் பொருளாதாரச் சூழலை எதிா்கொள்ள வங்கிகள் தங்களது நிா்வாக கட்டமைப்பை வலுவப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று, இடா் மேலாண்மை உத்திகளைக் கையாள்வதிலும் அவை சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

எண்ம (டிஜிட்டல்) பணப் பரிமாற்றத்தில் வேகமான தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்பட்டு வருகிறது. நிதித் தொழில்நுட்ப சேவையில் புதிய நிறுவனங்களின் வரவு அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் தங்களது தகவல்தொழில்நுட்பக் கட்டமமைப்புகளை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளா்கள் சேவையை மேம்படுத்துவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன், இணையவழி நிதிப் பரிமாற்றங்களில் பாதுகாப்பையும் வலுப்படுத்துவது அவசியம் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT