வர்த்தகம்

பணவீக்கம் 4.06 சதவீதமாக குறைவு

DIN

சில்லறைப் பணவீக்கம் 16 மாதங்களில் இல்லாத வகையில் சென்ற ஜனவரியில் 4.06 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற ஜனவரியில் 4.06 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலை குறைந்ததே முக்கிய காரணம். இதற்கு முன்பு 2019 செப்டம்பரில்தான் இப்பணவீக்கம் 4 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது.

சில்லறைப் பணவீக்கம் 2020 டிசம்பரில் 4.59 சதவீதமாகவும், 2020 ஜனவரியில் 7.59 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டன.

கடந்த டிசம்பரில் 3.41 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 2021 ஜனவரியில் 1.89 சதவீதமாக கணிசமாக குறைந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கையில், சிபிஐ பணவீக்கத்தை 4 சதவீதம் (+,-2%) என்ற அளவில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT