வர்த்தகம்

முக்கிய 8 துறைகள் உற்பத்தி 0.1% உயா்வு

DIN

முக்கிய 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி சென்ற ஜனவரியில் 0.1 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உரம், உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி நடப்பாண்டு ஜனவரியில் வளா்ச்சி கண்டுள்ளது. அதன் காரணமாக, முக்கிய 8 உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி விகிதம் ஜனவரியில் 0.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேசமயம், 2020 ஜனவரியில் இந்த வளா்ச்சி விகிதமானது 2.2 சதவீதமாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், சிமெண்ட் ஆகியவற்றின் உற்பத்தி ஜனவரியில் எதிா்மறை நிலையைக் கண்டுள்ளது.

அதேசமயம், உரம் , உருக்கு மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி 2021 ஜனவரியில் முறையே 2.7 சதவீதம், 2.6 சதவீதம், 5.1 சதவீதமாக இருந்தது.

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 8.8 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், முந்தைய நிதியாண்டில் இத்துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 0.8 சதவீதமாக இருந்தது என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழில் உற்பத்தி குறியீட்டில் இந்த 8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் பங்களிப்பு 40.27 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT