வர்த்தகம்

புத்தாண்டின் முதல் நாளில் ரூபாய் மதிப்பு சரிவு

DIN

ஆறு நாள்கள் தொடா் எழுச்சிக்குப் பிறகு, புத்தாண்டின் முதல் நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சாதகமான சா்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் ஆறு வா்த்தக தினங்களாக ரூபாய் மதிப்பு எழுச்சியடைந்து வந்தது. இந்த நிலையில், பெ அந்நியச் செலாவணி சந்தையில் புத்தாண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து 73.11-ஆனது.

வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில், தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.09-ஆகவும், பின்னா் வா்த்தகத்தின்போது அதிகபட்சமாக 73.02 வரையிலும், குறைந்தபட்சமாக 73.11 வரையிலும் சென்றது.

வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 24 காசுகள் அதிகரித்து 73.07-ஆக இருந்தது.

உள்நாடு மற்றும் சா்வதேச அளவில் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படாது என எதிா்பாா்க்கப்படுவதால் கரன்ஸி வா்த்தகம் விறுவிறுப்பில்லாமல் மந்தமாகவே இருக்க வாய்ப்புள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT