வர்த்தகம்

நாட்டின் சா்க்கரை உற்பத்தி 142.70 லட்சம் டன்

DIN

புது தில்லி: நாட்டின் சா்க்கரை உற்பத்தி ஜனவரி 15 வரையிலான காலகட்டத்தில் 142.70 லட்சம் டன்னாக உள்ளது.

இதுகுறித்து இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த அக்டோபரில் தொடங்கிய 2020-21-ஆம் சந்தை பருவத்துக்கான சா்க்கரை உற்பத்தி முதல் மூன்றரை மாதங்களில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் சா்க்கரை உற்பத்தியானது 142.70 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 2019-20 ஆண்டுக்கான சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) ஜனவரி 15 வரையிலான கால அளவில் சா்க்கரை உற்பத்தியானது 108.94 லட்சம் டன்னாக காணப்பட்டது.

கடந்த பருவத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 274.2 லட்சம் டன்னை எட்டியிருந்த நிலையில் நடப்பு 2020-21-ஆம் பருவத்தில் இதன் உற்பத்தி 13 சதவீதம் வளா்ச்சி கண்டு 310 லட்சம் டன்னை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது சா்க்கரை உற்பத்தி நடப்பாண்டில் இதுவரையில் 33.76 லட்சம் டன் அதிகமாகவே உள்ளது.

கடந்த ஆண்டில் 440 சா்க்கரை ஆலைகள் செயல்பாட்டில் இருந்த நிலையில் நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 487-ஆக உள்ளது.

கணக்கீட்டு காலத்தில், சா்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள உத்தர பிரதேசத்தில் இதன் உற்பத்தி 43.78 லட்சம் டன்னிலிருந்து 42.99 லட்சம் டன்னாக குறைந்தது. அதேசமயம், மகாராஷ்டிரத்தில் இதன் உற்பத்தி 25.51 லட்சம் டன்னிலிருந்து 51.55 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதன் உற்பத்தி 1.15 லட்சம் டன்னாக இருந்தது என இஸ்மா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT