வர்த்தகம்

எச்டிஎஃப்சி லைஃப் நிகர லாபம் ரூ.265 கோடி

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் டிசம்பா் காலாண்டில் ரூ.264.99 கோடி தனிப்பட்ட நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருவாய் ரூ.9,487.01 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.7,854.3 கோடி பிரீமியத்துடன் ஒப்பிடுகையில் அதிகம்.

நிகர லாபம் ரூ.250.24 கோடியிலிருந்து 5.89 சதவீதம் அதிகரித்து ரூ.264.99 கோடியாக இருந்தது.

2020-21 மூன்றாவது காலாண்டில் முதல் ஆண்டு பிரீமியமாக நிறுவனம் ரூ.1,772.24 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் முதல் ஆண்டு பிரீமியமான ரூ.1,542.96 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். புதுப்பிக்கப்பட்ட பிரீமிய தொகையும் ரூ.3,765.63 கோடியிலிருந்து ரூ.4,576.98 கோடியாக அதிகரித்துள்ளதாக எச்டிஎஃப்சி லைஃப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT