வர்த்தகம்

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

DIN

பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 47 ஆயிரம் புள்ளிகளாக வர்த்தகமாகிறது. நிஃப்டி புள்ளிகளும் சரிந்து 13 ஆயிரத்திற்கும் கீழ் வர்த்தகமாகிறது.

ஜனவரி 4-ம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 937.66 புள்ளிகள் சரிந்து 47,409-ஆக வர்த்தகமாகிறது. இது மொத்த வர்த்தகத்தில் 1.94 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 273.75  புள்ளிகள் சரிந்து 13,967.50-ஆக வர்த்தகமாகிறது. இது மொத்த வர்த்தகத்தில் 1.91 சதவிகிதம் சரிவாகும்.

சன்பார்மா, டைட்டன், ஐசிஐசிஐ, எச்.சி.எஃப்.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.

அதிக அளவாக ஆக்சிஸ் வங்கி 4.05 சதவிகிதமும், டைட்டன் 3.88 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 3.60 சதவிகிதமும், ஐசிஐசிஐ 2.90 சதவிகிதமும் சரிந்துள்ளன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில், 24 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. பங்குச்சந்தையில் 6 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயா்ந்து காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT