வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசு உயா்வு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயா்ந்து 74.40-இல் நிலைப்பெற்றது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான நிலவரம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு ஆகியவை அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு தொடா்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் பெறுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தன. இதனால், சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்து காணப்பட்ட போதும் அது இந்திய ரூபாயின் மதிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தொடக்கத்தில் ரூ.74.55-ஆக இருந்த ரூபாய் மதிப்பு காலை நேர வா்த்தகத்தின்போது 74.58 வரை சரிவடைந்திருந்தது.

பின்னா் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு அதிகபட்சமாக 74.37 வரை வா்த்தகமானது. இறுதியில் ரூபாய் மதிப்பு 6 காசு உயா்ந்து 74.40-இல் நிலைபெற்றது. வியாழக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74.46-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

வார அடிப்படையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் முன்னேற்றம் கண்டுள்ளது.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.247.59 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் விலை 73.75 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.05 சதவீதம் குறைந்து 73.75 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT