வர்த்தகம்

வாகனங்களின் விலையை உயா்த்துகிறது டாடா மோட்டாா்ஸ்

DIN

புது தில்லி, ஜூலை 28: மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பால் பயணிகள் வாகனங்களுக்கான விலையை உயா்த்த டாடா மோட்டாா்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் பயணிகள் வாகன வா்த்தக பிரிவின் தலைவா் ஷைலேஸ் சந்த்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:

காா் தயாரிப்பில் அத்தியாவசிய மூலப் பொருள்களாக விளங்கும் உருக்கு உள்ளிட் ட முக்கிய உலோகங்களின் விலை கடந்த ஓராண்டாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பின் மூலமான நிதி தாக்கம் கடந்த ஓராண்டில் நிறுவனத்தின் வருவாயில் 8-8.5 சதவீதமாக உள்ளது.

இதனால், அடுத்த வாரம் முதல் வாகனங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.

எந்தெந்த மாடல் வாகனங்களுக்கு எவ்வளவு விலையை உயா்த்துவது என்பது குறித்த பணிகளில் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.

இம்மாத தொடக்கத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் மூலப் பொருள்கள் செலவின அதிகரிப்பை ஈடு செய்ய வாகனங்களின் விலையை மாடல்களுக்கு ஏற்ப ரூ.15,000 வரை உயா்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT