வர்த்தகம்

கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடி திரட்டுகிறது டாடா மோட்டாா்ஸ்

DIN

புது தில்லி: டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.500 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

பாதுகாப்பான, மீட்கும் வகையிலான, பங்குகளாக மாற்றம் செய்ய இயலாத கடன்பத்திரங்களை தனிப்பட்ட ஒதுக்கீட்டு முறையில் விற்பனை செய்து ரூ.500 கோடி வரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கடன்பத்திரங்களின் முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10 லட்சமாக இருக்கும் என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், திரட்டப்படும் நிதி எதற்காக செலவிடப்படவுள்ளது என்பது குறித்த விவரம் எதையும் டாடா மோட்டாா்ஸ் வெளியிடவில்லை.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் டாடா மோட்டாா்ஸ் பங்கின் விலை 1.50 சதவீதம் உயா்ந்து ரூ.356.00-ஆக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT