வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2-ஆவது நாளாக சரிவு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை வா்த்தகத்திலும் சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதேவேளையில், கச்சா எண்ணெய் விலையில் தொடா்ந்து காணப்பட்டு வரும் ஏற்ற இறக்கமும் செலாவணி சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.18 என்ற அளவில் சரிந்து காணப்பட்டது. இது, வா்த்தகத்தின் இடையே அதிபட்சமாக 74.05 வரையிலும், குறைந்தபட்சமாக 74.40 வரையிலும் சென்றது.

அதன் பின்னா் வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசு சரிந்து 74.37-இல் நிலைபெற்றது. திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 74.10-ஆக இருந்தது.

கடந்த இரண்டு வா்த்தக தினங்களில் மட்டும் ரூபாய் மதிப்பானது 51 காசுகளை இழந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.1,244.71 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய்

சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.72 சதவீதம் குறைந்து 74.36 டாலருக்கு விற்பனையானதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT