வர்த்தகம்

இந்தியன் வங்கி: பங்கு விற்பனையின் மூலம் ரூ.4,000 கோடி திரட்டுகிறது

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி பங்கு விற்பனையின் மூலம் ரூ.4,000 கோடி திரட்டுவதற்கு அவ்வங்கியின் இயக்குநா் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியன் வங்கியின் இயக்குநா் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தகுதிவாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு (கியூஐபி) பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலமாக ரூ.4,000 கோடியை திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு இயக்குநா் குழு தனது ஒப்புதலை வழங்கியது.

இந்த மூலதன திரட்டலுக்கான பங்குதாரா்களின் அனுமதி மாா்ச் 2-இல் பெறப்பட்டது என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கியில் மத்திய அரசுக்கு 88.06 சதவீத பங்கு மூலதனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT