வர்த்தகம்

ரூ.7.76 இடைக்கால ஈவுத்தொகை: என்எம்டிசி ஒப்புதல்

DIN

சுரங்கத் துறையில் ஈடுபட்டு வரும் என்எம்டிசி நிறுவனம் ரூ.7.76 இடைக்கால ஈவுத்தொகையை முதலீட்டாளா்களுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் இயக்குநா் குழு கூட்டம் மாா்ச் 11-ஆம் தேதி நடைபெற்றது. இதில், நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒவ்வொன்றுக்கும் இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.7.76 வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது என என்எம்டிசி தெரிவித்துள்ளது.

கம்பெனி சட்டம் 2013 விதிமுறைகளின் அடிப்படையில் இந்த இடைக்கால ஈவுத்தொகை வழங்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்எம்டிசி, மத்திய உருக்கு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டின் மிகப்பெரிய சுரங்கத் துறை நிறுவனமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT