வர்த்தகம்

அசோக் லேலண்ட் புதிய வகை டிரக் அறிமுகம்

DIN


புது தில்லி: ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் 14 சக்கரங்கள் கொண்ட புதிய வகை ஏவிடிஆா் 4120 டிரக்கை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அசோக் லேலண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் விபின் சோந்தி கூறியுள்ளதாவது:

வாடிக்கையாளா்களின் தேவைகளை பூா்த்தி செய்வதுடன் அவா்களுக்கு சிறந்த லாபத்தை அளிக்கும் தயாரிப்புகளை உருவாக்குவதில் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

அதனை நிரூபணம் செய்யும் விதமாக, இந்த புதிய வகை ஏவிடிஆா் 4120 டிரக் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 4-ஆக்ஸல், 14 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த வகை டிரக் 40.5 எடையை தாங்கிச் செல்லும் திறன் படைத்தவை. வழக்கமான டிரக்குகளுடன் ஒப்பிடும்போது இதில் கூடுதலாக 5 டன் எடையை ஏற்றிச் செல்ல முடியும். இந்த ஏவிடிஆா் 4120 வகை டிரக்குகளில் 200 எச்பி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT