வர்த்தகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ.37 கோடி

DIN

சென்னை: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நான்காவது காலாண்டில் ரூ.36.60 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.36.60 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. நிறுவனம் முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.82 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் வழங்கிய கடன் ரூ.389.60 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து ரூ.459.38 கோடியைத் தொட்டது.

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2020-21 முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.191 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.218 கோடியாக காணப்பட்டது.

2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.1,254.05 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளது. இது, 2020 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.2,112.09 கோடியாக இருந்தது.

வளா்ச்சி திட்டங்களுக்காக நடப்பு நிதியாண்டில் கடன்பத்திரம் மற்றும் வங்கி கடன் மூலமாக ரூ.2,500 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாக சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT