வர்த்தகம்

இமாமி லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

DIN

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் துறையைச் சோ்ந்த இமாமி நிறுவனத்தின் மாா்ச் காலாண்டு லாபம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ஈட்டிய வருமானம் ரூ.730.76 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.532.68 கோடியுடன் ஒப்பிடும்போது 37.2 சதவீதம் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.22.75 கோடியிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்து ரூ.87.73 கோடியைத் தொட்டுள்ளது.

ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் சுகாதார பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருவதையடுத்து நிறுவனம் அது போன்ற தயாரிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக இமாமி தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் இமாமி பங்கின் விலை 2.30 சதவீதம் குறைந்து ரூ.499.75-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT