வர்த்தகம்

2025-க்குள் புதிய விற்பனையில் மின்சார 2 சக்கர வாகனங்களின் பங்களிப்பு 10%-ஆக இருக்கும்: இக்ரா

DIN

மும்பை: வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் புதிய வாகனங்கள் விற்பனையில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் பங்களிப்பு 8 முதல் 10 சதவீதம் அளவுக்கு இருக்கும் என தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி மின்சாரத்தில் இயங்கும் காா்கள் மற்றும் டிரக்குள் விற்பனையும் சிறப்பான அளவில் மேம்பட்டு வருகிறது. இருப்பினும் நடுத்தர கால அளவில் இவற்றின் குறைவாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

செயல்பாட்டு செலவினம் குறைவு, மானியங்களின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்களால் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

உலகளவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் புதிய காா்கள் விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு 4.4 சதவீதம் அளவுக்கு இருந்தது. இது, நடப்பாண்டில் 5 சதவீதத்தை தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வணிக ரீதியிலான மின்னேற்ற உள்கட்டமைப்புகள் குறைவாக இருப்பதால் ஒப்பீட்டளவில் மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் குறைவாகவே உள்ளன.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் புதிய வாகனங்களின் விற்பனையில் மின்சார இருசக்கர வாகனங்களின் பங்களிப்பானது 8 முதல் 10 சதவீதம் வரைியல் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோன்று, மின்சாரத்தில் இயங்கும் 3 சக்கர வாகன விற்பனை பங்களிப்பும் 30 சதவீதம் அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிா்காலத்தில் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறுவது தவிா்க்க முடியாததது. இருப்பினும், சீனா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளின் சந்தைகளைப் போலல்லாமல் இந்தியாவில் ஊடுருவலின் வேகம் மிதமான அளவிலேயே இருக்கும் என இக்ரா தெரிவித்துள்ளது.

கோட்ஸ்

மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாறுவதை விரைவுபடுத்தும் விதமாக மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எடுத்து வரும் நோ்மறையான மற்றும் செயலூக்கமான கொள்கை நடவடிக்கைகள் மகிழ்சியளிப்பதாக உள்ளது.

-சம்ஷா் திவான், துணைத் தலைவா், இக்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT