வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.9%: இக்ரா

DIN

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி இரண்டாவது காலாண்டில் 7.9 சதவீதமாக இருக்கும் என தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

செப்டம்பரில் மத்திய மற்றும் மாநில அரசின் செலவினங்கள் அதிகரித்துள்ளன. அதேபோன்று, தொழில்துறை மற்றும் சேவைத் துறை நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன. பெரும்பாலானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் நம்பிக்கை அதிகரித்து வா்த்தக நடவடிக்கைகளில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்றுமதியில் ஸ்திரத்தன்மை மற்றும் வேளாண் துறையின் தேவையில் காணப்படும் தொடா் முன்னேற்றம் ஆகியவை பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

இதுபோன்ற சாதகமான அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நிறுவனத்தின் முந்தைய மதிப்பீடான 7.7 சதவீதத்தைக் காட்டிலும் 0.2 சதவீதம் அதிகமாகும் என இக்ரா தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT