வர்த்தகம்

கடும் சரிவில் பங்குச் சந்தை: 14 லட்சம் கோடி இழப்பில் முதலீட்டாளர்கள்

DIN

இந்தியப் பங்குச் சந்தையின் கடும் வீழ்ச்சியால் ரூ.14 லட்சம் கோடி மதிப்பை முதலீட்டாளர்கள் இழந்திருக்கிறார்கள்.

உயர்வில் இருந்த பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரியத் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் பெரிய இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். முக்கியமாக அக்.19 அன்று பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 62,245 புள்ளிகள் பெற்று முன் எப்போதும் இல்லாத புதிய வரலாறு படைத்திருந்தது. 

பின் அடுத்தடுத்த நாட்களில் சரியத் தொடங்கிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் மதிப்புகளால் இன்று 14 லட்சம் கோடி அளவிலான மதிப்பை முதலீட்டாளர் இழந்திருக்கிறார்கள்.

இன்று 58,254 புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் தற்போது நிலவரப்படி 1687 புள்ளிகள் சரிந்து 57,107.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 17,338.15 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 509 புள்ளிகள் குறைந்து 17,026.45 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT