வர்த்தகம்

48 எம்பி கேமராவுடன் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி ஏ23!

DIN

தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ‘சாம்சங் கேலக்ஸி ஏ23’ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

’கேலக்ஸி’ தொடர்களில் இறுதியாக இந்தியாவில் வெளியான ஏ22 ஸ்மார்ட்போனின் அம்சங்களை விட கூடதல் சிறப்பம்சங்களுடன் ஏ23 ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துடன் சந்தைக்கு வர இருக்கிறது.

’சாம்சங் கேலக்ஸி ஏ23' சிறப்பம்சங்கள் :

* 6.60 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியா டெக் டைமன்சிட்டி 700 பிராசசர்

*இரண்டு ரேம் வகையுடன் வெளியாகிறது . உள்ளக நினைவகம்  6 மற்றும் 8 ஜிபி, கூடுதல் நினைவகம் 128, 128 ஜிபி

*பின்பக்கம் 48 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

* நீல நிறம் 

ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை ரூ.19,999 (6ஜிபி ரேம்)  ரூ.21,999(8ஜிபி) என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகும் தேதி குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.சந்தைக்கு வந்ததும் சாம்சங் நிலையங்களிலும்  , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT