வர்த்தகம்

3 நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த ஸியோமி

DIN

இந்தியா முழுவதும் கடந்த மூன்று நாட்களில்(அக்-2,3,4) 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஸியோமி நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடியில் இணையதளங்கள் மூலமும் நேரடியாகவும் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஸியோமி நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

ஸியோமியின்  ரெட்மி , எம்ஐ பிராண்ட் ஸ்மார்ட்போன்களில்  புது வரவுகளான ஸியோமி 11 லைட் என்இ 5ஜி , எம்ஐ 11எக்ஸ் , ரெட்மி நோட் 10 எஸ் மற்றும் ரெட்மி நோட் 10 புரோ ஸ்மார்ட்போன்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. 

’தீபாவளி வித் எம்ஐ’ என்கிற பெயரில் வெளியான  ஸியோமி தயாரிப்புகள் எம்ஐ இணைய தளத்திலும் அமேசான் , பிளிப்கார்ட் தளங்களிலும் விற்கப்பட்ட சாதனங்களின் விற்பனை சதவீதம் கடந்த ஆண்டை விட 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.

மேலும் 1 லட்சம் ஸியோமி ஸ்மார்ட் டிவிகளும் விற்பனையானதால் 4கே டிவி சந்தையிலும் 53 மடங்கு வளர்ச்சி அடைந்து மற்ற போட்டி நிறுவனங்களால் ஸியோமி கவனிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதம் முழுவதும் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி இருப்பதால் வாடிக்கையாளர்கள் அமேசான் , பிளிப்கார்ட் தளத்தில் ஸியோமி சாதனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT