வர்த்தகம்

என்டிபிசி, பிஜிசிஐஎல் நிறுவனங்கள் ரூ.2,593 கோடி ஈவுத்தொகை

DIN

மத்திய அரசுக்கு சொந்தமான என்பிடிசி, பிஜிசிஐஎல் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டுக்கு ரூ.2,593 கோடி ஈவுத் தொகையை வழங்கியுள்ளன.

இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் (டிஐபிஏஎம்) வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

என்பிடிசி நிறுவனத்திடமிருந்து நடப்பு நிதியாண்டுக்காக ரூ.1,560 கோடி ஈவுத்தொகையை மத்திய அரசு பெற்றுக் கொண்டுள்ளது. அதேபோன்று, பிஜிசிஐஎல் நிறுவனத்திடமிருந்தும் ரூ.1,033 கோடி ஈவுத்தொகை பெறப்பட்டுள்ளது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கு இதுவரையில் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்த அளவில் ரூ.7,515 கோடி ஈவுத்தொகை பெறப்பட்டுள்ளது.

இவைதவிர, பங்கு விலக்கல் திட்டத்தின் மூலம் சிறுபான்மை பங்குகளை விற்பனை செய்த வகையில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.9,110 கோடியை திரட்டியுள்ளதாக டிஐபிஏஎம் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT