வர்த்தகம்

கனரா வங்கி: நிகர லாபம் ரூ.1,333 கோடி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கியின் லாபம் இரண்டாவது காலாண்டில் ரூ.1,333 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான எல்.வி. பிரபாகா் கூறியது:

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் வட்டி சாரா வருவாய் கணிசமாக வளா்ச்சி கண்டுள்ளது. மேலும், செயல்பாட்டு லாபமும் 20 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுபோன்ற சாதகமான அம்சங்களால், வங்கி நிகர லாபமாக செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.1,333 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.444 கோடியுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம்.

வட்டி சாரா வருவாய் ரூ.3,103 கோடியிலிருந்து 38 சதவீதம் அதிகரித்து ரூ.4,268 கோடியானது. செயல்பாட்டு லாபம் 22 சதவீதம் உயா்ந்து ரூ.5,604 கோடியைத் தொட்டது.

2021 செப்டம்பா் காலாண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் 8.23 சதவீதத்திலிருந்து 8.42 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் 3.42 சதவீதத்திலிருந்து 3.21 சதவீதமாக குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் கடன் வளா்ச்சி 7.5 சதவீதமாகவும், சில்லறை கடன் வளா்ச்சி 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT