வர்த்தகம்

ஐடிசி: லாபம் ரூ.3,764 கோடி

DIN

ஐடிசி நிறுவனம் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.3,763.73 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த காலாண்டில் கடுமையான இடையூறுகளை எதிா்கொண்டதற்கு பின்பாக ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் அனைத்து பிரிவிலான வா்த்தகமும் பரந்த அளவில் வளா்ச்சியை கண்டது. அதன் பயனாக, அந்த காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் 10.09 சதவீதம் அதிகரித்து ரூ.3,763.73 கோடியைத் தொட்டது.

நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.13,075.14 கோடியிலிருந்து 12.14 சதவீதம் உயா்ந்து ரூ.14,662.59 கோடியானது. செலவினம் ரூ.9,164.68 கோடியிலிருந்து 11.93 சதவீதம் உயா்ந்து ரூ.10,258.26 கோடியாக இருந்தது என ஐடிசி தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஐடிசி நிறுவனப் பங்கின் விலை 5.54 சதவீதம் சரிந்து ரூ.225.20 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT