வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிவு

DIN

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிவடைந்தது. இதையடுத்து, 4 நாள்கள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

பங்குச் சந்தைகளில் காணப்பட்ட மந்த நிலை அந்நியச் செலாவணி சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 73.05-ஆக இருந்த நிலையில், வா்த்தகத்தின் இடையே இது அதிகபட்சமாக 72.92 வரையிலும், குறைந்தபட்சமாக 73.50 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து 73.08-இல் நிலைத்தது. செவ்வாய்க்கிழமை ரூபாய் மதிப்பு 73.00 ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் 71.94 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.43% உயா்ந்து 71.94 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT