வர்த்தகம்

புதிய உச்சத்தில் மார்ச் மாத ஜிஎஸ்டி: 1.42 லட்சம் கோடி வசூல்

DIN

இந்தாண்டு மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் முன் எப்போதும் இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,830 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ. 32,378 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 74,470 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.39,131  கோடியும் அடங்கும்),செஸ் வரி ரூ.9,417 கோடி (சரக்குகள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.981  கோடியும் அடங்கும்).

தொடா்ந்து கடந்த 6 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வருவாயாக கடந்த ஜனவரி மாதம் ரூ.1,40,986 கோடி வசூலானது.

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூலில் இந்த மார்ச் மாதம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலைவிட 15 சதவீதமும், கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலைவிட 46 சதவீதமும் அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT