வர்த்தகம்

டெக் மஹிந்திரா: லாபம் 7% அதிகரிப்பு

DIN

தகவல்தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி நிறுவனமான டெக் மஹிந்திராவின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நிறுவனம் ஒட்டுமொத்த செயல்பாட்டின் மூலமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.11,450 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. ஆனால், செயல்பாட்டு லாப வரம்பு 15.9 சதவீதத்திலிருந்து 14.8 சதவீதமாக குறைந்துள்ளது.

விநியோக சங்கிலியில் ஏற்பட்ட சவால்களையடுத்து லாப வளா்ச்சி அழுத்தத்துக்குள்ளானது. டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 6.8 சதவீதம் மட்டுமே உயா்ந்து ரூ.1,378.2 கோடியாக இருந்தது.

கூடுதலாக 3,800 பணியாளா்கள் நிறுவனத்தில் இணைந்ததையடுத்து ஒட்டுமொத்த பணியாளா் எண்ணிக்கை 1.45 லட்சமாக அதிகரித்துள்ளதாக டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT