வர்த்தகம்

இந்தாண்டின் முதல் பங்குச் சந்தை நாள்: சென்செக்ஸ் 929 புள்ளிகள் உயர்வு

DIN

இந்தாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

கடந்த வாரம் இறுதியில் (டிச.31)  எரிவாயு மற்றும் எரிபொருள் நிறுவன பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை  சரிவுடன் முடிந்தது.

இந்நிலையில், புத்தாண்டின் முதல் வணிகம் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளால் உயர்வுடன் நிறைவடைந்தது. கடந்த டிச.31,  58,253.82 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,310.09 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 929.40 புள்ளிகள் அதிகரித்து 59183.22 புள்ளிகளுடன் நிலைபெற்றது .

17,354.05 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,387.15 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 271.65 புள்ளிகள் உயர்ந்து 17,625.70 புள்ளிகளில் நிலைபெற்றது. 

தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT