வர்த்தகம்

உலகளவில் முதலிடம்: ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 லட்சம் கோடி டாலர்கள்!

DIN

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் தனக்கென தனி முத்திரையுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தையில் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பைப் பெற்று புதிய சாதனையைப் படைந்திருக்கிறது.

புத்தாண்டு துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 182.01 டாலரிலிருந்து 182.88 டாலராக  உயர்ந்து வர்த்தகமானதால் அதன் சந்தை மதிப்பு 2.99 லட்சம் கோடி டாரலாக அதிகரித்துள்ளது. இதனால், உலகளவில் அதிகப்படியான சந்தை மதிப்பைக் கொண்டுள்ள முதல் நிறுவனமாக ஆப்பிள் மாறியிருக்கிறது.

ஆப்பிளின் தயாரிப்புகளான ஐபோன், மேக்-புக், ஆப்பிள் டிவி ஆகியவை பல புதிய வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

மேலும், 2 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் மைக்ரோசாஃப்ட் இரண்டாம் இடத்திலும், அமெசான், டெஸ்லா,ஆல்பாபெட் நிறுவனங்கள் 1 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களிள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT