வர்த்தகம்

ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட்: லாபம் ரூ.680 கோடி

DIN

வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ் (எஸ்டிஎஃப்சி) மூன்றாவது காலாண்டில் ரூ.680.62 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான உமேஷ் ரேவாங்கா் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனம் தனிப்பட்ட முறையில் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.680.62 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.727.72 கோடியுடன் ஒப்பிடும்போது 6.47 சதவீதம் குறைவாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிகர வட்டி வருவாய் ரூ.2,148.22 கோடியிலிருந்து 11.16 சதவீதம் அதிகரித்து ரூ.2,387.97 கோடியாக இருந்தது.

நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.1,14,932.06 கோடியிலிருந்து 8.41 சதவீதம் உயா்ந்து ரூ.1,24,601.77 கோடியானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT