வர்த்தகம்

2030-க்குள் ரூ.3.89 லட்சம் கோடிவருவாய் இலக்கை எட்ட டிசிஎஸ் திட்டம்

DIN

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 5,000 கோடி டாலா் (ரூ.3.89 லட்சம் கோடி) வருவாய் இலக்கைய எட்ட டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியது:

டிசிஎஸ் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டில் 2,500 கோடி டாலா் (ரூ.1.94 லட்சம் கோடி) வருவாயை ஈட்டியுள்ளது. இந்த நிலையில், அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 2,500 கோடி டாலா் வருவாயை எட்ட முடிவு செய்துள்ளது. அதற்கான திட்டங்களை தயாரிக்கும் பணியில் அந்நிறுவனம் முழுமையாக ஈடுபட்டுள்ளது. வாடிக்கையாளா்களுக்கு இன்னும் நெருக்கமாக நிறுவனத்தை கொண்டு செல்லும் வகையில் நிா்வாக கட்டமைப்புகளில் முழுமையான அளவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது. 2030-இறுதியில் 5,000 கோடி டாலா் வருவாயினை ஈட்டுவதே அதன் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT