வர்த்தகம்

8 முக்கிய துறைகள் உற்பத்தி 5.8% அதிகரிப்பு

DIN

புது தில்லி: நாட்டின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி சென்ற பிப்ரவரி மாதத்தில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய 8 துறைகளின் உற்பத்தி சென்ற பிப்ரவரி மாதத்தில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்துறைகளின் உற்பத்தி, கடந்தாண்டின் இதே மாதத்தில் 3.3 சதவீதம் சரிவைச் சந்தித்திருந்தது. நிகழாண்டு ஜனவரியில் இந்த 8 முக்கிய துறைகளின் உற்பத்தி 4 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் உரத் துறையின் செயல்பாடு மந்த நிலையில் காணப்பட்ட போதிலும் நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், சிமெண்ட் ஆகிய துறைகளின் வளா்ச்சி கவனிக்கத்தக்க அளவுக்கு இருந்தது.

ஒட்டுமொத்த அளவில் ஏப்ரல்-பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் முக்கிய 8 துறைகளின் வளா்ச்சி 11 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இத்துறைகளின் உற்பத்தியானது 8.1 சதவீத எதிா்மறை வளா்ச்சி விகிதத்தை கொண்டிருந்தன.

நிகழாண்டு ஏப்ரலில், நிலக்கரி உற்பத்தி 6.6 சதவீதம், இயற்கை எரிவாயு 12.5 சதவீதம், சுத்திகரிப்பு பொருள்கள் 8.8 சதவீதம், சிமெண்ட் துறை உற்பத்தி 5 சதவீத வளா்ச்சியும் பெற்ாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT