வர்த்தகம்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.3%: எஸ்&பி

DIN

பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதையடுத்து, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை எஸ்&பி தர மதிப்பீட்டு நிறுவனம் 7.3 சதவீதமாக குறைத்துள்ளது.

இதுகுறித்து எஸ்&பி மேலும் கூறியுள்ளதாவது: பணவீக்கம் தொடா்ந்து உச்சத்தில் இருந்து வருவது கவலைக்குரிய அம்சமாக உள்ளது. இதனால், கடனுக்கான வட்டி விகிதங்களை தற்போதைய நிலையிலிருந்து மேலும் அதிகரிக்கும் நிலைக்கு ரிசா்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது. இது, உள்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உற்பத்தி நடவடிக்கைகளில் பெரிய பாதிப்பை உருவாக்கும்.

மேலும், நீண்ட காலம் நீடித்து வரும் ரஷியா-உக்ரைன் போரும் வளா்ச்சிக்கு பின்னடைவாகவே உள்ளது. இதுபோன்ற பல்வேறு அக மற்றும் புறக் காரணி சிக்கல்களால் இந்தியாவின் பொருளாதாரம் 7.3 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி காணும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில் இந்த வளா்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதமாக இருக்கும் என எஸ்&பி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT