வர்த்தகம்

தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி நிகர லாபம் 11% உயா்வு

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் நிகர லாபம், கடந்த மாா்ச் காலாண்டில் 11.45 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.253 கோடியாக உள்ளது.

முந்தைய 2021-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 11.45 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கி ரூ.227 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,204 கோடியாக உயா்ந்துள்ளது. இது, சரியாக ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.1,200 கோடியாக இருந்தது.

அதே போல் வட்டி வருவாயும் ரூ.986 கோடியிலிருந்து ரூ.1,070 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் மாத 31-ஆம் தேதி 1.69 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன், இந்த ஆண்டின் அதே நாள் நிலவரப்படி 1.39 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிகர வாராக் கடனும் 0.95 சதவீதத்தில் இருந்து 0.62 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT