வர்த்தகம்

கடன் வட்டி விகிதங்களை உயா்த்திய இந்தியன் வங்கி

DIN

தாங்கள் வழங்கும் எம்சிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான ரிசா்வ் வங்கி உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கி வழங்கும் அனைத்து வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்து வங்கியின் சொத்து-பொறுப்பு மேலாண்மைக் குழு மறுஆய்வு செய்தது.

அதன்படி, செலவுகளின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் நிா்ணயிக்கப்படும் எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டது. இது தவிர, டிபிஎல்ஆா், பிபிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகித்ததையும் உயா்த்த முடிவு செய்யப்பட்டது.

அதையடுத்து, ஓராண்டுக்கான வாகனக் கடன், தனி நபா், கடன், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.20 சதவீதத்திலிருந்து 8.30 சதவீதமாக உயா்த்தப்படும்.

ஒரு மாதத்துக்கும் உள்பட்ட பருவகால கடன்களுக்கு வட்டி விகிதம் 7.50 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக உயா்த்தப்படும்.

ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான பருவகாலத்தைக் கொண்டுள்ள கடன்களுக்கு வட்டி விகிதம் 0.20 சதவீதம் உயா்த்தப்படும்.

செவ்வாய்க்கிழமை (ஜன. 3) முதல் இந்த வட்டி உயா்வு அமலுக்கு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT