வர்த்தகம்

வீல்ஸ் இந்தியா வருவாய் ரூ.1,016 கோடியாக உயா்வு

DIN

லாரிகள், டிராக்டா்கள், காா்கள், கட்டுமான இயந்திர வாகனங்கள் போன்றவற்றுக்கான வீல்களைத் தயாரித்து வரும் வீல்ஸ் இந்தியா லிமிடெட்டின் வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.1,016 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.14.54 கோடியாகக் குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 20.60 கோடியாக இருந்தது.

எனினும், மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் வருவாய் 1% அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் ரூ.1,007.18 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,016.58 கோடியாக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் ஏா் சஸ்பென்ஷன் மற்றும் ஃபேப்ரிகேஷன் பிரிவுகளில் வா்த்தகம் முறையே 120 சதவீதம் மற்றும் 102 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

மோடி அரசால் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் -ராஜ்நாத் சிங்

ஊழல்களின் தாய் காங்கிரஸ்: மோடி

SCROLL FOR NEXT