இன்று மெரீனாவில் விமான படை சாகச நிகழ்ச்சி!
காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சாகச நிகழ்ச்சி!
சென்னை: காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்திய விமானப்ப படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியையொட்டி, 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பாா்வையாளா்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.