8 பாயிண்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் "வாடா போடா நண்பர்கள்'. "புகைப்படம்' படத்தில் நடித்த நந்தா, "இனிது இனிது' படத்தில் நடித்த ஷரன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். தெலுங்கு சினிமா உலகைச் சேர்ந்த யாஷிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் "நிழல்கள்' ரவி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் மணிகை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
÷படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், ""இரண்டு நாயகர்கள், ஒரு நாயகி இருப்பதால் இது முக்கோண காதல் கதை இல்லை. நட்பும் காதலும்தான் கரு. நட்பின் வலிமையையும், காதலின் மென்மையையும் புது விதத்தில் சொல்லியிருக்கிறேன். இன்றைய இளைஞர்களின் நட்பையும், காதலையும் மையமாக வைத்து கதை உருவாகியிருக்கிறது.
÷திறமையைப் பயன்படுத்த முடியாதபோது பாதை மாறும் இளைஞர்களின் வாழ்க்கையை இயல்பாக படம் பிடித்திருக்கிறோம். பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிக் காட்சிகள் மட்டும் இப்போது படமாகி வருகிறது. பாடல்கள் புது விதத்தில் படமாகியிருக்கிறது. ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்'' என்றார்.
ஒளிப்பதிவு - அருண்ஜேம்ஸ். இசை - சித்தார்த். பாடல்கள் - நா.முத்துக்குமார். படத்தொகுப்பு - சுரேஷ் அரஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.